முத்தரசநல்லூர்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

முத்தரசநல்லூர்map
Remove ads

முத்தரசநல்லூர் (ஆங்கிலம்: Mutharasanallur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

விரைவான உண்மைகள்

திருச்சி மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கிராமம் ஆகும். பண்டைய மக்களின் வாழ்க்கைக் குறிப்புகள் உள்ள பழைமையான கல்வெட்டுக்களை கொண்ட கோவில்கள் இங்கு காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்கள் இந்திய தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Remove ads

வரலாறு

முன்னர் இப்பகுதியை ஆட்சி செய்ததாகக் கூறப்படும் முத்தரசன் என்ற குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் மிகப் பழமையான கிராமம். இங்குள்ள தொடருந்து நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடருந்து நிலையம், திருச்சிகரூர் தடத்தில் மூன்றாவது நிலையமாகும். (பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள் ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருங்கப்பேட்டை, கம்பரசம்பேட்டை ஆகியவை.

முன்னாள் ஊராட்சிச் தலைவர்கள்

  • K. கணேசன்
  • அ. மருதநாயகம்
  • சீனிவாசன்
  • சீ. இராஜசேகரன்
  • என். காமராஜ்
  • லலிதா காமராஜ்
  • T.ஆதிசிவம்
Remove ads

மக்கள்

சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம். நெல், கரும்பு, வாழை, எள், உளுந்து ஆகியன முக்கிய பயிர்களாகும்.

விழாக்கள்

மாரியம்மன் திருவிழா

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து 7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த திருவிழாவின் முடிவில் பௌர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின் மணலில் 2500 பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது.

மதுரகாளியம்மன் திருவிழா

இந்தத் திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு போன்றவை இவ்விழாவின் சிறப்பு.

புள்ளியியல் குறிப்புகள்

  • வட்டம்: ஸ்ரீரங்கம்
  • ஒன்றியம்: அந்தநல்லூர்
  • பரப்பளவு: ____ ச.கி.மீ
  • நன்செய் நிலம்: ____ ஏக்கர்
  • புன்செய் நிலம்: ____ ஏக்கர்
  • மக்கள் தொகை: சுமார் 10 ஆயிரம்
  • முக்கிய தொழில்: விவசாயம்
  • சாகுபடி பயிர்கள்: நெல், கரும்பு, வாழை, உளுந்து, எள்
  • துவக்கப் பள்ளிகள்: 2
  • நடுநிலைப் பள்ளிகள்: 1 [4]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads