மும்பை கடற்கரை உலாச்சாலை

From Wikipedia, the free encyclopedia

மும்பை கடற்கரை உலாச்சாலைmap
Remove ads

கடற்கரை உலாச்சாலை (Marine Drive) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மும்பை நகரத்தின் தென்கோடியில் நாரிமன் முனையில் அமைந்துள்ளது. அரபுக் கடலை ஒட்டிய இந்த 'C' வடிவ காங்கிரீட் உலாச்சாலை 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த கடற்கரை உலாச்சாலை, வடகோடியில் கிர்கோன் சௌபாத்தி மற்றும் தென்கோடியில் நாரிமன் முனையையும் இணைக்கிறது. இதன் வடகோடியில் மலபார் மலை உள்ளது. இந்த உலாச்சாலை மேற்கு - தென்மேற்கு வழியாகச் செல்கிறது. கடற்கரை உலாச்சாலையை இராணியின் கழுத்தணி என்று அழைப்பர். ஏனெனில், இரவு நேரத்தில் கடற்கரை உலாச்சாலையை உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது, தெரு விளக்குகள் வெளிச்சத்தில் முத்து சரம் போல காட்சியளிக்கும்.

விரைவான உண்மைகள் மும்பை கடற்கரை உலாச்சாலைMumbai Marine Drive இராணியின் கழுத்தணி, நாடு ...
Thumb
மலைபார் மலையிலிருந்து கடற்கரை உலாச்சாலையின் காட்சி

இந்த கடற்கரை உலாச்சாலையின் அதிகாரப்பூர்வமான பெயர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை என்பதாகும். இக்கடற்கரை சாலையின் நெடுகில் இருபுறகளிலும் நெடுகிலும் ஈச்ச மரங்கள் காணப்படும். இதன் வடகோடியில் புகழ்பெற்ற சௌபாத்தி கடற்கரை உள்ளது. இச்சாலையில் பல உணவு விடுதிகள் உள்ளது. இப்பகுதியில் மகாராட்டிரா ஆளுநரின் மாளிகை அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads