வஞ்சகர் உலகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வஞ்சகர் உலகம் (Vanjagar Ulagam) 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநரான் மனோஜ் பீதா இயக்கியுள்ளார். பீதா மற்றும் விநாயக் ஆகியோர் படத்தின் உரையாடல்களுக்கான வசனத்தை எழுதியுள்ளனர்.[1] இப்படத்தில் குரு சோமசுந்தரம், சிபி, விசாகன் வனங்கமுடி, அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் ஹரீஷ் பேராடி ஆகியோர் நடித்துள்ளனர், வாசு விக்ரம், ஜான் விஜய், அழகம் பெருமாள், சாந்தினி தமிழரசன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு கர்நாடக இசை மற்றும் டப்ஸ்டெப் இரண்டையும் பயன்படுத்திய முதல் தமிழ் படமாகவும் இந்த படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு சாம். சி. எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரோட்ரிகோ டெல் ரியோ ஹெராரா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் கையாண்டுள்ளனர். இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது.

விரைவான உண்மைகள் வஞ்சகர் உலகம், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

வஞ்சகர் உலகம் என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் மனோஜ் பீதாவால் தொடங்கப்பட்டது. இத்திரைப்படம் இயக்குநராக அவரது முதல் முயற்சியாகும், முன்னதாக எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளராகப் பணியாற்றினார்.[2][3] தெலுங்கு நடிகை அனிஷா அம்ப்ரோஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் அனிஷா அம்ப்ரோஸ் இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகி்ல் அறிமுகமானார்.[4][5]

இத்திரைப்படம் மஞ்சுளா பீதாவின் ஸ்டுடியோ லாபிரிந்த் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிக்கப்பட்டது. பிரபலமான மெக்சிக ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ டெல் ஹெராரா உயர்தரமாக சண்டைக் காட்சிகளை உருவாக்க பிரதான ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார், மேலும் கூடுதல் ஒளிப்பதிவாளராக சரவணன் ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

கண்ணனின் லீலை என்ற பாடலுக்கு கர்நாடக இசை மற்றும் டப்ஸ்டெப் இரண்டையும் இணைத்த முதல் தமிழ் திரைப்படம் என்றும் இந்த படம் கருதப்பட்டது.[7][8] இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை பிரபல திரைப்பட இயக்குநர் கெளதம் மேனன் 15 பிப்ரவரி 2018 அன்று வெளியிட்டார்.[9]

Remove ads

கதைக்களம்

ஒரு பெண், அவளது வீட்டில் இறந்துகிடக்கிறாள். துப்பு துலக்கத் தொடங்குகிறது காவல்துறை. அவள் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் இளைஞன், அவளது கணவன், அவளது முன்னாள் காதலன் என அனைவரும் விசாரிக்கப்படுகிறார்கள். இந்தக் கொலையில் நிழலுலக தாதா ஒருவனும் சம்பந்தப்பட்டிருக்கிறான் எனச் சந்தேகப்பட்டு, இன்னொருபுறம் துப்பு துலக்கத் தொடங்குகிறார்கள் இரு பத்திரிகையாளர்கள். காவலர்களும் பத்திரிகையாளர்களும் இணைந்து கொலையாளியைக் கண்டுபிடித்தனரா? நிழலுலகில் மறைந்து வாழும் தாதாவை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினரா? இந்த இரண்டு வினாக்களுக்கும் விடை சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்தின் இசையை சாம் சி. எஸ். செய்தார்.[10] சந்தோஷ் நாராயணன் பாடிய கண்ணாடி நெஞ்சன் என்ற பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முதல் பாடலாகும். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரால் 15 ஆகஸ்ட் 2018 அன்று வெளியிடப்பட்டது.   [ மேற்கோள் தேவை ] மற்றொரு பிரபல இசை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சாம் சி.எஸ் உடன் ஒத்துழைத்து தீ யாழினி என்ற பாடலுக்காக பாடினார் .[11][12]

பிகைண்ட் உட்ஸ் இத்திரைப்படத்திற்கு ஐந்திற்கு 2.25 நட்சத்திரங்கள் மதிப்பீடு வழங்கியது [13] டைம்ஸ் ஆப் இந்தியா ஐந்திற்கு 2,5 நட்சத்திர மதிப்பீடு வழங்கியது.[14]

Remove ads

வெளியீடு

இப்படத்தின் தயாரிப்பு 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் முடிவடைந்து 6 ஏப்ரல் 2018 அன்று வெளியிடப்படவிருந்தது. ஆனால், பின்னர் அதன் திரையரங்கு வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், திரைப்பட வெளியீட்டின் இறுக்கமான பந்தயம் காரணமாக மீண்டும் தாமதமானது.[15] படத்தின் வெளியீட்டு தேதி 7 செப்டம்பர் 2018 க்கு தள்ளப்பட்டது.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads