இமாச்சலப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம்
இமாச்சலப் பிரதேசத்தின் மத்தியப் பல்கலைக்கழகம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா, காங்க்ராவில் அமைந்துள்ள ஒரு மத்திய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். இது காங்க்ரா மாவட்டத்தின் சாபூரில் உள்ள ஒரு தற்காலிக வளாகத்தில் இருந்து செயல்படுகிறது. தெகுராவிலும் தர்மசாலாவிலும் இரண்டு நிரந்தர வளாகங்கள் கட்டுவதற்கான நடைமுறைகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே மத்தியப் பல்கலைக்கழகம் இல்லாத ஒவ்வொரு மாநிலத்திலும் மத்தியப் பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் என்ற அரசின் கொள்கையின் விளைவாக 2009 இல் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் மத்தியப் பல்கலைக்கழகம், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009 கீழ் நிறுவப்பட்டது.
Read article
Nearby Places
தெற்காசியப் பல்கலைக்கழகம்