இராமநாதபுரம் மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றுஇராமநாதபுரம் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4068.31 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் இராமேஸ்வரம், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Read article








