Map Graph

இரோசெச்டர் பல்கலைக்கழகம்

இரோசெச்டர் பல்கலைக்கழகம் பரவலாக இரோசெச்டர், நியூயார்க் மாநிலத்தில் இரோசெச்டரில் அமைந்துள்ள தனியார் துறை, சமயச்சார்பற்ற, ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை வழங்கிவருகிறது. தொழில்சார் கல்வியும் வழங்கப்படுகின்றது. இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் 6 பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், 2 பேராசிரியர்கள், மற்றும் 1 மூத்த ஆய்வுக் கூட்டாளி நோபல் பரிசு பெற்றுள்ளனர்; 32 துறையாசிரியர்கள் அறிவியல், பொறியியல், மருத்துவத் துறைகளில் தேசிய அகாதமிகளில் இடம்பெற்றுள்ளனர்; 12 முன்னாள் மாணவர்களும் துறையாசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றுள்ளனர்; 20 துறையாசிரியர்களுக்கு குக்கென்னெய்ம் பெல்லோசிப் கிடைத்துள்ளது.

Read article