Map Graph

சம்தர் சமஸ்தானம்

சம்தர் சமஸ்தானம், இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சம்தர் நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், புந்தேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சம்தர் சமஸ்தானம் 461 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 33,472 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

Read article