சுங்கிங் கட்டடம்
சுங்கிங் மென்சன் கட்டடம் ஹொங்கொங்கில் கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் நடுவில் மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் இந்தியர், பாக்கித்தானியர், நேப்பாளிகள், வங்காளிகள், இலங்கையர் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்க நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் ஐரோப்பியர்கள் எனவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியிலும் நன்கு புகழ் பெற்ற கட்டடமாகும்.
Read article