Map Graph

திருமணிக்கூடம்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருமணிக்கூடம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இக்கோயிலும் ஒன்றாகும். திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர்.

Read article
படிமம்:Thirumanikoodam4.jpg