Map Graph

திருவண்பரிசாரம்

திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். இலக்குமிதேவி ஆனந்தமடைந்து திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்ததால் இத்தலத்தில் திருமால் திருவாழ்மார்பன் என்றழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம். திருவாகிய இலக்குமி பதியாகிய திருமாலை சார்ந்து இந்த ஊரில் தங்கியதால் இவ்வூர் திருப்பதிசாரம் என அழைக்கப்படுகிறது. இதனால் இக்கோவிலில் இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. இறைவன்:திருவாழ்மார்பன். இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம். விமானம்:இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.

Read article
படிமம்:Thriuppathisaram.jpgபடிமம்:TirupathiSaram_Temple.jpgபடிமம்:TirupathiSaram_Tank.jpg