Map Graph

நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம்

ஓவிய அருங்காட்சியகம், கோட்டா ஜகார்தா பாராட்டி, ஜகார்தா.

நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் (MACAN) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் கேபோன் ஜேருக் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும். இந்தோனேசியாவில் நவீன மற்றும் சமகால இந்தோனேசிய மற்றும் சர்வதேச கலைகளின் சேகரிப்புகளைக் கொண்டு அமைந்துள்ள முதல் அருங்காட்சியகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் 7,107 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது, காட்சிக்கூடத்தின் பரப்பளவு சுமார் 4,000 சதுர மீட்டர் ஆகும். டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் 100 சிறந்த இடங்கள் 2018 பட்டியலில் இந்த அருங்காட்சியகம் இடம் பெற்றுள்ளது. இந்த நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகமானது நவம்பர் 2017 இல் பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

Read article