பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்
பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஒரு பன்பயன்பாட்டு விளையாட்டரங்கமாகும். இது தற்போது கூடுதலாக துடுப்பாட்ட அரங்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வரங்கில் 15,000 பேர் வரை அமரும் வசதிகள் காணப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றிய முதலாவது தேர்வுத்துடுப்பட்டப் போட்டி இங்கேயே நடைபெற்றது. இலங்கையின் முன்னாள் அரச அதிகாரியும், தமிழ் யூனியன் கழகத்தின் தலைவராகவும் இருந்த பாக்கியசோதி சரவணமுத்துவின் பெயரால் இம்மைதானம் அழைக்கப்படுகிறது.
Read article