பார்வதிபுரம் (கன்னியாகுமரி மாவட்டம்)
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிபார்வதிபுரம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், ஆளுர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இது நாகர்கோவில் நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது. நாகர்கோவில் மையத்திலிருந்து ஐந்து கி.மீ., மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது. இது நாகர்கோவிலின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. கன்னியாகுளம், ஆலம்பாறை, கிறிஸ்டோபர் நகர், ராஜலட்சுமி நகர், களியன்காடு ஆகியவை பார்வதிபுரத்தின் அருகில் உள்ள ஊர்கள் ஆகும். இவற்றில் பெருவிளை பார்வதிபுரத்தின் ஒரு பெரிய பகுதியாகும். திருவனந்தபுரம்வ் தேசிய நெடுஞ்சாலை 47 வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ள அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்படுகின்றன. 31 ஏ பேருந்து பார்வதிபுரம் சுற்றுவட்டார பேருந்து நிலையம் கிறிஸ்டோபர் பேருந்து நிறுத்தம் அண்ணா பேருந்து நிலையத்துடன் பார்வதிபுரத்தை இணைக்கிறது. இந்த சேவை ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் கிடைக்கும்.

