பிம்பிரி தொடருந்து நிலையம்
பிம்பிரி தொடருந்து நிலையம் மகாராஷ்டிராவில் உள்ள பிம்பிரி நகரில் உள்ளது. இது பிம்பிரி காய்கறிச் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. இது மும்பை தொடருந்து நிலையத்தில் இருந்து புனே தொடருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. இங்கு புனே புறநகர தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன. இவை தவிர, சின்ஹகாடு விரைவுவண்டியும், சகாயத்ரி விரைவுவண்டியும் நின்று செல்கின்றன. மும்பையில் இருந்து பந்தர்பூருக்கும், சீரடிக்கும், கர்நாடகத்தில் உள்ள பிஜாப்பூருக்கும் செல்லும் பயணியர் வண்டிகளும் நின்று செல்கின்றன.
Read article