புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்கங்காதீசுவரர் கோயில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னை மாநகராட்சியின் புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும். கோயிலின் மூலவர் கங்காதீசுவரர் ஆவார். தாயார்: ஸ்ரீ பங்கசாம்பாள். உற்சவர்கள்: நடராசர் மற்றும் சிவகாமி. இத்திருக்கோயில் காசிக்கு நிகரான பெருமை கொண்டது ஏனக் கூறப்படுகிறது. இரகுகுல வம்சத்தைச் சேர்ந்த சகரன் என்பவரது வம்சத்தில் தோன்றிய பகீரதன் என்பவர் பிரதிசுட்டை செய்த 108-ஆவது சிவலிங்கத்தின் திருத்தலம் இதுவாகும். இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கோயில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன.
Read article