Map Graph

மகாலிங்கபுரம்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மகாலிங்கபுரம் (Mahalingapuram) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் பகுதியில், 13°03′26.3″N 80°14′03.1″E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, அமைந்தக்கரை மற்றும் தியாகராய நகர் ஆகியவை மகாலிங்கபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். வி. வி. சர்வதேச நீச்சல் பயிற்சிப் பள்ளி என்ற தனியார் நிறுவனம், நீச்சல் பயிற்சி பெற விரும்புபவர்கள் மற்றும் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் ஆகியவர்களுக்காக, மகாலிங்கபுரத்திலிருந்து பயனளிக்கிறது.

Read article