Map Graph

யவன இராச்சியக் கல்வெட்டு

மதுராவுக்கு அருகில் கிடைத்த கி.மு முதலாம் நூற்றாண்டைய கல்வெட்டு

யவன இராச்சியக் கல்வெட்டு, இதனை மகேரா கிணற்றுக் கல்வெட்டு என்றும் அழைப்பர்கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்மணற்கல்லால் ஆன இக்கல்வெட்டு பிராமி எழுத்துமுறையில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இப்பகுதி மக்களுக்கு, பிராமணர் ஒருவர் கிணறு மற்றும் குளம் வெட்டிக் கொடுத்ததைக் குறித்துள்ளது. இந்தியாவின் மதுராவிற்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகேரா எனும் ஊரின் கிணற்றின் அருகே 1988-இல் இக்கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இக்கல்வெட்டு மதுரா அருங்காட்சியகத்தில் உள்ளது.

Read article