Map Graph

வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதி

வடசேரி (Vadasery) தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலின் ஒரு பகுதியாகும். முன்பு நல்ல ரக பருத்தி ஆடைகளைத் தயாரிக்கும் மையமாக திகழ்ந்தது. கைத்தறி நெசவு தேங்கிவிட்டது. மாவட்டத்திலேயே பெரிய சந்தை இங்குள்ளது. காய்கறி, பழவகைகள் மற்றும் பிற பொருட்களும் விற்பனைக்கு வருகின்றன. தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு கூடுகின்றனர். கால்நடைகள், குறிப்பாக உழவுமாடுகள் வாங்க மக்கள் இங்கு கூடுகிறார்கள். ஏராளமான வாழைப் பழவகைகள் வருவது சிறப்பாகும். கேரள மாநிலத்திற்கு அதிகம் ஏற்றுமதியாகிறது.

Read article
படிமம்:Vadasery_market.JPGபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg