1897 அஸ்ஸாம் நிலநடுக்கம்
1897 அஸ்ஸாம் நிலநடுக்கம் என்பது 1897-ம் ஆண்டு ஜூன் 12-ம் நாள் இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கம் ஆகும். இது ரிக்டர் அளவில் 8.7 எனப் பதிவாகியது. இதன் விளைவாக 6,000 மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். இது அப்பகுதியிலிருந்த கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியது. மேலும் இது இந்தியாவின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. மேலும் டாக்காவில் அதிகமான மக்கள் உயிரை இழந்தனர். இதனால் 50 மைல் நீள இருப்புப்பாதை முழுவதுமாக அழிக்கப்பட்டது. டார்ஜிலிங்கில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டன. இதனால் தேயிலைத் தொழில் அழிந்தது. கிழக்கு வங்காளத்தில் பல பாலங்கள் உடைந்த காரணத்தால் தொடருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
Read article