1 உலக வர்த்தக மையம்
ஒன்று உலகக் கண்காணிப்பகம், என்பது அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரத்தின், கீழ் மன்ஹாட்டன் பகுதியில் மிக உயரமான வானளாவியான (Skyscrapper) 1 உலக வர்த்தக மையத்தின் உச்சியில், 100, 101 மற்றும் 102 ஆகிய மூன்று நிலைகளில், அமைந்துள்ள கண்காணிப்பு மேல்தட்டுத் தளம் ஆகும். மன்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு மிக உயர்ந்த கண்காணிப்புத் தளத்தில், தரையிலிருந்து கூரை வரையிலான கண்ணாடி ஜன்னல்கள் வழியே மன்ஹாட்டன் தீவு, குயீன்சு தீவு, புரூக்ளின் தீவு, ஸ்டேட்டன் தீவு, எல்லீசுத் தீவு, சுதந்திரதேவி சிலை, மற்றும் நியூ ஜெர்சி மற்றும் கனெடிகட் (Connecticut) மாநிலங்களின் பகுதிகள் போன்றவற்றைக் கண்டுகளிக்கலாம். இங்கிருந்து இற்றைநிலத் தொழில் நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்ட வாய்ஸ் காணொளி, காணொளி காட்சித் தொகுப்பு உலா, உருவகப்படுத்தப்பட்ட நியூ யார்க் நகரின் வரலாற்றைப் பார்த்தவாறே பயணிக்க உதவும் உயர்தொழிநுட்ப மின்தூக்கிகள், ஃபாரெவர் திரையரங்க ஒலி - ஒளிக் காட்சியகம், ஒன்று உலகக் குறியிடத் தேடுபொறி, ஸ்கைபோர்ட்டல் போன்ற வசதிகள், நியூயார்க் நகரம், அதன் பெருநகரங்கள் (Boroughs), 1 உலக வர்த்தக மையம் மற்றும் ஒன்று உலகக் கண்காணிப்பகத்தின் வரலாறு பற்றி பயணிகள் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.