Map Graph

2005 காஷ்மீர் நிலநடுக்கம்

2005 காஷ்மீர் நிலநடுக்கம் 8 அக்டோபர் 2005 அன்று பாகிஸ்தான் நேரப்படி காலை 8:50:39 மணிக்கு, 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க மையமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின் தலைமையிடமான முசாஃபராபாத் இருந்தது. இந்நிலநடுக்கத்தால் முசாஃபராபாத், பாலகோட் நகரங்கள் 70% அளவிற்கு பலத்த சேதமுற்றது. மேலும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மூன்று மாவட்டப் பகுதிகள் பலத்த சேதமடைந்தது. பாகிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் நிலச்சரிவாலும், கட்டிட இடிபாடுகளாலும், மக்கள் இறப்பு எண்ணிக்கை 86,000 –87,351 அளவிலும்; காயமடைந்தோர் எண்ணிக்கை 69,000 – 75,266 அளவிலும் இருந்தது. மேலும் 2.8 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத் பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டது.

Read article
படிமம்:Pakistan_relief_location_map.jpgபடிமம்:Earthquake_Information_for_Pakistan.png