2011 சிக்கிம் நிலநடுக்கம்
2011 சிக்கிம் நிலநடுக்கம் ஞாயிறு, செப்டம்பர் 18 2011 அன்று உள்ளூர் நேரம் மாலை 18.10க்கு சிக்கிம்-நேபாள எல்லை அருகில் கஞ்சன்சங்கா மலைப் பகுதியை மையமாகக் கொண்டு உந்தத்திறன் ஒப்பளவு 6.9 அளவிலான சேதம் விளைவித்த நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா முழுமையும், நேபாளம், பூடான், வங்காளதேசம் மற்றும் தெற்கு திபெத்தில் உணரப்பட்டது. அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் உணரப்பட்ட 4.2 அளவிலான நிலநடுக்கத்திற்கு சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தவிர, 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த நான்காவது நிலநடுக்கமாகும்.
Read article
Nearby Places

கிம்மிகெலா சுலி
நேபாளம் சிக்கிம் இடையில் உள்ள சிகரம்