Map Graph

2015 நேபாள நிலநடுக்கம்

2015 நேபாள நிலநடுக்கம் 2015 ஏப்ரல் 25 ஆம் நாள் சனிக்கிழமை உள்ளூர் நேரம் 11:56 மணிக்கு இடம்பெற்ற 7.8 Mw நிலநடுக்கத்தைக் குறிக்கும். நேபாளத்தின் லாம்சுங் மாவட்டத்தின் கிழக்கு-தென்கிழக்கே 15 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த இவ்வதிர்வு 15 கி.மீ. ஆழத்தில் இடம்பெற்றது. 1934 நிலநடுக்கத்தின் பின்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். குறைந்தது 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் நேபாளத்திலும், வேறு சிலர் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் இறந்துள்ளனர். தலைநகர் காட்மாண்டூவில் பல-நூற்றாண்டுகள் பழமையான யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் கட்டடங்கள் பல அழிந்துள்ளன.

Read article