Map Graph

அட்சிங்கிமாரி

அட்சிங்கிமாரி (Hatsingimari), இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டத்தில் அமைந்த தெற்கு சல்மாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் கிராம ஊராட்சியும் ஆகும். இது அசாம் மாநிலத் தலைநகரான திஸ்பூருக்கு தென்கிழக்கே 234 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது துப்ரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. தெற்கு சல்மாரா மாவட்டம் 9 பிப்ரவரி 2016 இல் நிறுவப்பட்டது. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அட்சிங்கிமாரி கிராம ஊராட்சியின் எழுத்தறிவு 77.73% ஆக இருந்தது. சனவரி 26, 2016 இல் அசாமின் முதலமைச்சர் தருண் கோகய் தென் சல்மாரா-மன்காசர் உட்பட நான்கு மாவட்டங்களை நிருவாகத் தலைமையிடமாக அறிவித்தார்.

Read article