அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில்
என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி பகுதிக்கு அருகில் அரியக்குடிஅரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி பகுதிக்கு அருகில் அரியக்குடி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். காரைக்குடியில் ஒரு தென்திருப்பதி என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து சுமார் பதினைந்து கி.மீ. தூரத்தில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அமையப் பெற்றுள்ளது. இக்கோயிலின் மூலவர் திருவேங்கடமுடையான் மற்றும் தாயார் அலர்மேல்மங்கை ஆவர். உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் உற்சவ தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். இக்கோயிலின் கருடாழ்வார் தனது இருபுறமும் சிம்மங்களுடன் காட்சியளிக்கிறார். ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை நினைவூட்டும் சித்திரங்களைக் கொண்ட தசாவதார மண்டபம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது.






