இந்திரா பூங்கா
இந்திரா பூங்கா என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் ஐதராபாத்தின் மையத்திலுள்ள ஒரு பொது பசுமைப் பூங்காவாகும். 1975 செப்டம்பரில் இந்தப் பூங்காவிற்கு அப்போதைய இந்தியாவின் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த மறைந்து பக்ருதின் அலி அகமது அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இது 1978ஆம் ஆண்டில் மக்களுக்கு முழுமையான நிலப்பரப்புடன் திறக்கப்பட்டது. இந்தப் பூங்கா 76 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இதனை ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கிறது. இது உசேன் சாகர் ஏரியுடன் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வட்டாரமான தோமல்குடாவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் விருது பெற்ற ஒரு பாறைத் தோட்டம் அமைந்துள்ளது. அதன் பெரிய அளவு மற்றும் நகர்ப்புறத்தின் நடுவில் ஒரு பெரிய ஏரி இருப்பதால், இந்திரா பூங்கா ஒரு நகர்ப்புறச் சோலையாகும்.
Read article