Map Graph

கல்லடி (மட்டக்களப்பு)

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்

கல்லடி (Kallady) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இலங்கையின் மிகவும் நீளமான ஒல்லாந்தர் காலத்துப் புகழ் பெற்ற பாலம் இங்கு காணப்படுகின்றது. இராமகிருஷ்ண மிஷனின் ஆன்மீகச் சூழலும், சுவாமி விபுலானந்தரின் இலட்சியத்தில் உருவான சிவாநந்த வித்தியாலயமும் கல்லடி எனும் மகத்தான கிராமத்தின் பெயரைப் பாரெல்லாம் பரவச்செய்துள்ளன. 2004 ஆழிப்பேரலையின் போது இப்பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் தற்போது புதிதாக ஒரு பாலம் சுனாமி நிவாரண நிதியின் மூலம் புனரமைக்கப்படுகின்றது. சுவாமி விபுலாநந்தரின் சமாதியும் இங்கு உள்ளது.

Read article