Map Graph

கள்ளிக்குப்பம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கள்ளிக்குப்பம் ("Kallikuppam") என்பது இந்தியாவில் சென்னை அம்பத்தூரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக செங்குன்றம் - அம்பத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் இருந்து உருவாகியுள்ளது. அக்டோபர் 2011 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சியாக இருந்த அம்பத்தூரின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் பின்னர் அரசு ஆணைபடி 2011இல் அம்பத்தூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் தற்போது கள்ளிக்குப்பம், சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை மாநகராட்சியின் 7வது மண்டலமான அம்பத்தூரில் வார்டு எண் 82-இன் ஒரு பகுதியாக மாறிவிட்டது. கள்ளிக்குப்பம் அம்பத்தூர் சட்ட மன்றத் தொகுதியிலும், ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் அடங்கும். வில்லிவாக்கம், பாடி, ஆவடி, புழல், செங்குன்றம் 5 கி.மீ அருகில் உள்ளது.

Read article