Map Graph

காங்ரா பள்ளத்தாக்கு

மேற்கு இமயமலையில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு

காங்ரா பள்ளத்தாக்கு என்பது மேற்கு இமயமலையில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்காகும். நிர்வாக ரீதியாக, இது முக்கியமாக இந்தியாவில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுற்றுலா இதன் உச்ச காலமாக இருக்கும். காங்ரி பேச்சுவழக்கு அங்கு பேசப்பட்டு வருகிறது. காங்ரா மாவட்டத்தின் தலைமையகமான தரம்சாலா பள்ளத்தாக்கில் உள்ள தௌலாதரின் தெற்குப் பகுதியிலுள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இது மஸ்ரூர் குகை வரைக்கோயிலின் தாயகமாகும். இது "இமயமலையின் பிரமிடுகள்" என்றும் அழைக்கப்படுகிறது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்படுவதற்கான போட்டியில் உள்ள இடமாக உள்ளது.

Read article
படிமம்:Kangra.jpgபடிமம்:Commons-logo-2.svg