கான்பூர் அருங்காட்சியகம்
கான்பூர் அருங்காட்சியகம், கான்பூர் சங்கராலயா என்றழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் தொழில்துறை மையமாகக் கருதப்படுகிற கான்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இது எட்வர்ட் VII இன் நினைவாக ஆங்கிலேயர்களால் கிங் எட்வர்ட் மெமோரியல் ஹால் என்ற பெயரில் கட்டப்பட்டது. கான்பூர் நகரத்தை உருவாக்கியதில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் மற்றும் நபர்கள் தொடர்பாக கதையைச் சொல்லும் கலைப்பொருட்கள் மற்றும் காட்சிப் பொருள்களின் தொகுப்புக் களஞ்சியமாக இது அமைந்துள்ளது, மேலும் கான்பூர் நகரின் சிறப்பு மிக்க கடந்த கால வரலாற்றைப் காலத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்களைச் சொல்கிறது.
Read article
