கார்வால் கோட்டம்
கார்வால் கோட்டம் IPA: /ɡəɽʋːɔɭ/) வடமேற்கு இந்தியாவின் இமயமலையின் உத்தரகண்ட் மாநிலத்தின் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்த ஒரு வருவாய் கோட்டமாகும். இதன் நிர்வாகாத் தலைமையிடம் பௌரி நகரம் ஆகும். கார்வால் மொழி பேசும் கார்வாலி இன மக்கள் கார்வால் கோட்டப் பகுதியில் அதிகம் வாழ்கின்றனர். இந்துக்களின் புனித தலங்களான சோட்டா சார் தாம், பஞ்ச கேதார தலங்கள் மற்றும் ஜோஷி மடம் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைக்கு முன்னர் வரை இப்பகுதியை கார்வால் இராச்சியத்தினர் ஆட்சி செய்தனர். பின்னர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
Read article