கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். 1981இல் பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இது, 1986 இல் முழு பல்கலைக்கழகமாக மாறியது. இதன் ஒரு வளாகம் திருகோணமலையில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி இதன் ஒரு பாகமாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி 2005இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது, தற்போது இதன் வகையாக மட்டக்களப்பு நகரில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் இயங்கி வருகின்றது.
Read article