Map Graph

கைகா அணுமின் நிலையம்

கைகா அணு மின் நிலையம் இந்தியாவில் கர்நாடக ‎மாநிலத்தில் அமைந்த உத்தர கன்னடம் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள ‎கைகா என்ற இடத்தில், மார்ச் மாதம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டு ‎வருகிறது. இந்திய அணுமின் கழகம் வழிநடத்தும் அணு மின் நிலையங்களில் இந்த ஆலையும் ஒன்றாகும்.‎ இத்திட்டத்தை இந்திய அணுமின் கழகம் 1989 ஆம் ‎ஆண்டு முதல் செயல்படுத்தத் தொடங்கியது. முதல் இரு உலைப்பணிகள் ‎நடக்கும் பொழுது, இந்த ஆலையின் ஈயத்தால் ஆன சுவர் இடிந்து விழுந்ததால் ‎சர்ச்சைகள் எழுந்தன, அதனால் ஆலையின் முதல் கட்டப்பணிகள் 2000 ‎ஆண்டில் தான் முடிவு பெற்றது. ‎

Read article