கொஸ்கியஸ்கோ மலை
கொஸ்கியஸ்கோ மலை அல்லது கஸ்கியஸ்கோ மலை என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பனி மலைகளில் அமைந்துள்ள மலை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 2,228 மீட்டர்கள் உயரமுள்ளது. இதுவே ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள மலைகளில் மிக உயரமான மலையாகும். போலந்தின் தேசியவீரரான தாடஸ் கொஸ்கியஸ்கோ நினைவாக போலந்து நாடுகாண் பயணியும் மலையேறியுமான "போல் எட்மண்ட் ஸ்திரிசெலெஸ்கி" என்பவரால் 1840 ஆண்டு கொஸ்கியஸ்கோ மலை என இம்மலைக்குப் பெயரிடப்பட்டது.
Read article