சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்
சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் (முன்னர்: புனே பல்கலைக்கழகம்) இந்தியாவில் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் மகாராட்டிர மாநிலம் புனே நகரின் வடமேற்கில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது சுமார் 411 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வளாகத்தில் 46 கல்விசார் துறைகளுடன் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தினை கிழக்கத்திய ஒக்ஸ்போர்ட் எனவும் அழைக்கின்றனர். முதலில் புனே பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்ட இப்பல்கலைக்கழகத்திற்கு பின்னர், பெண்களின் விடுதலைக்காகவும், அதிகாரத்திற்காகவும், கல்விக்காகவும் போராடிய சாவித்திரிபாய் புலே எனும் பெண்மணியின் பெயர் சூட்டப்பட்டது.
Read article