சிந்துதுர்க் கோட்டை
சிந்துதுர்க் கோட்டை என்பது மேற்கு இந்தியாவில் மகாராட்டிரக் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் அரேபிய கடலில் ஒரு தீவை ஆக்கிரமித்துள்ள வரலாற்று கோட்டையாகும். இந்த கோட்டையை பேரரசர் சத்ரபதி சிவாஜி கட்டினார். மும்பைக்கு தெற்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மகாராட்டிராவின் கொங்கண் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வான் நகரின் கரையில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.
Read article
Nearby Places
மால்வான்