Map Graph

சிறீ ஆஞ்சநேயர் கோவில்

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள கல்கிசை பகுதியில் அமைந்துள்ளது.

சிறீ ஆஞ்சநேயர் கோவில் இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து ஒன்பது கிலோமீட்ட்டர் தொலைவில் உள்ள கல்கிசை பகுதியில் அமைந்துள்ள ஓர் இந்து ஆலயமாகும். இந்து இதிகாசமான இராமாயணத்தின் மையப் பாத்திரங்களில் ஒன்றான அனுமானுக்கு இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நந்தி, நவகிரகம், ராமர், சீதை, பார்சுவநாதரின் சமண சிலைகள் மற்றும் விநாயகர் சிலைகள் போன்றவையும் உள்ளன. இலங்கையில் 1996 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதி நிறுவப்பட்ட இக்கோவில், பஞ்சமுகம் எனப்படும் ஐந்து முகங்கள் கொண்ட அனுமான் சிலை உள்ள ஒரே இந்து ஆலயமாகக் கருதப்படுகிறது. உலகிலேயே ஆஞ்சநேயருக்கு தேர் உள்ள ஒரே கோவில் இது என்றும் கூறப்படுகிறது.

Read article