சீதாமௌ இராச்சியம்
சீதாமௌ இராச்சியம் பிரித்தானிய இந்தியாவின் கீழ் இருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சீதாமௌ நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டசௌர் மாவட்டத்தில் இருந்தது. சீதாமௌ இராச்சியத்தை 1701-ஆம் ஆண்டில் நிறுவியவர் இராஜா கேசவதாஸ் ஆவார். 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த சீதாமௌ இராச்சியத்தின் சராசரி ஆண்டு வருவாய் ரூபாய் 1,30,000 ஆகும். முகலாயர்]]களுக்கு ஜிஸ்யா வரியை செலுத்தாத காரணத்தால் ரத்லம் இராச்சியத்தை முகலாயப் பேரரசில் இணைத்தனர். 1705-இல் கேசவதாஸ் ரத்லம் இராச்சியத்தை சீதாமௌ இராச்சியத்துடன் இணைத்து கொண்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அரசியல் இணைப்பு ஒப்பந்தப்படி சீதாமௌ இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
Read article