Map Graph

சீர்காழி தொடருந்து நிலையம்

தமிழகத்திலுள்ள தொடர்வண்டி நிலையம்

சீர்காழி தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியான திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் முக்கிய தொடருந்து பாதையாக உள்ளது. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம் போன்ற நகரங்களுக்கு தினசரி விரைவுத் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருப்பதி, மும்பை, வாரணாசி, புவனேஸ்வர் போன்ற வெளிமாநில நகரங்களுடன் இணைக்கும் விரைவுத் தொடருந்துகளும் இவ்வழியாக இயக்கப்படுகிறது. சீர்காழிக்கு 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.

Read article