Map Graph

சுங்குவார்சத்திரம்

சுங்குவார்சத்திரம் (Sunguvarchathiram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இல் அமைந்துள்ளது. சுங்குவார்சத்திரத்தில் மாவு மில்கள் அதிகம் அதில் பழமையான மாவு மில் SDK OIL MILL AND FLOWR MILL இது காஞ்சிபுரத்திற்கு 25 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு தொழில் நகரமாகும். இங்கு மிகவும் பெயர்பெற்ற தொழிற்சாலைகளான மோட்டொரோலா கைபேசி நிறுவனம், சாம்சங் கைபேசி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் கைபேசிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான பாக்சுகான் போன்ற பல்வேறுதரப்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 25 மணித்துளிகள் பயணத்தில் இந்த ஊரகப்பாங்கான தொழில் நகரத்தை அடையலாம்.இது பெருநகரச் சென்னைப் பகுதியில் உள்ளது.

Read article