சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம்
2022 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம் ஆப்கானித்தான் நேரப்படி 2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் தேதியன்று அதிகாலை 02:24 மணிக்கு ஆப்கானித்தானுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே உள்ள துராந்து எல்லைக்கோடு பகுதியில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.2 என பதிவாகியது. இந்நிலநடுக்கம் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் 5.9 ரிக்டர்கள் அளவில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. குறைந்தது 1000 பேர் பலியானதாகவும் 1500 பேர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் சில பகுதிகள், பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து, கிழக்கு பஞ்சாப் மாகாணம் மற்றும் ஈரான் போன்ற 500 கிலோமீட்டர் தொலைவில் வாழும் குறைந்தது 119 மில்லியன் மக்களால் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறியப்படுகிறது.
Read article