செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்)
திருவத்திபுரம் என்பது நகரின் அலுவல் பெயர் ஆகும்.செய்யாறு (Cheyyar), அல்லது திருவத்திபுரம் (Thiruvathipuram) அல்லது திருவோத்தூர் (Tiruvothur), இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், செய்யாறு வருவாய் கோட்டம், செய்யாறு ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 27 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை நகராட்சியாகவும் அமைந்துள்ளது. செய்யாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவத்திபுரம் நகரம் இங்கு அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் செய்யாறு ஆறு மூலம் நன்கு அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் திருவத்திபுரம் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
Read article