சோளிங்கர் வட்டம்
சோளிங்கர் வட்டம் தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இராணிப்பேட்டை மாவட்டத்தின், அரக்கோணம், நெமிலி, வாலாஜா ஆகிய மூன்று தாலுகாக்களை சீரமைத்து, டிசம்பர் 2020-இல் சோளிங்கர் வட்டம் நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் தலைமையிடம் சோளிங்ர் நகரம் ஆகும். இவ்வட்டத்தில் சோளிங்கர், வேலம், பாணாவரம் ஆகிய 3 குறுவட்டங்களும், 49 வருவாய் கிராமங்களும் உள்ளடக்கியது. இந்த வட்டத்தில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
Read article