தலிகோட்டா சண்டை
தலிகோட்டா சண்டை அல்லது தலைக்கோட்டை சண்டை அல்லது தலைக்கோட்டை போர், விசயநகரப் பேரரசிற்கும் தக்காண சுல்தான்களுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போராகும். இதன் விளைவாக தென்னிந்தியாவின் கடைசி பெரும் இந்து இராச்சியம் முடிவிற்கு வந்தது. தலிகோட்டா கர்நாடகாவின் பீஜப்பூரின் தென்கிழக்கே ஏறத்தாழ 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரத்தின் தலைமை அச்சுத ராயரிடம் இருந்து ராமராயருக்கு மாறிய போது சுல்தானகங்கள் ஒன்றிணைந்து விசயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்கள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர்.
Read article