Map Graph

திருநந்திக்கரை நந்தீசுவரர் கோயில்

நந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் திருநந்திக்கரை புறநகர்ப் பகுதியில், நந்தியாறு கரையோரப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற 12 சிவன் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். இக்கோயிலின் கருவறை மண்டபம் வட்ட வடிவில் காணப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் நந்தீசுவரர் ஆவார். சிவபெருமான் பார்வதியுடன், விநாயகரை மடியில் அமர்த்தியவாறு அருள்புரிகிறார். விஷ்ணு, விநாயகர், சாஸ்தா, நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் நந்தியாறு ஆகும்.

Read article