Map Graph

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை (Denkanikottai), இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, தேன்கனிக்கோட்டை வட்ட நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். தேன்கனிக்கோட்டை நகரம் சோழர்கள், போசளர்கள், முகலாயர்கள் மற்றும் பிரித்தானியர்கள் என பல்வேறு பேரரசுகள் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. தேன்கனிக்கோட்டை சோழர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது என்பதற்கு 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கிடைத்துள்ளது. போசளர்கள் கால கட்டிடக்கலைக்கு வேட்டையாடிய பிரான் திருக்கோயில் சிறந்த சான்றாகும். தேன்கனிக்கோட்டை நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg