Map Graph

நட்சத்திரங்களின் சாலை

நட்சத்திரங்களின் சாலை அல்லது நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue of Stars) என்பது ஹொங்கொங், சிம் சா சுயி நகரில், விக்டோரியா துறைமுகத்தின் கவுலூன் பக்கக் கரையோரமாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும். இதன் நீளம் 440 மீட்டர்களாகும். இது ஹொங்கொங்கின் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் முதன்மையான இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள், சாலையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கின் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான விக்டோரியா துறைமுகமும், அந்த துறைமுகக் கடல் பரப்புக்கு எதிரே தென்படும் ஹொங்கொங் தீவின், வானளாவிகளின் அழகியக் காட்சியும் காண்போர் எவரையும் கவரச்செய்யும். இதனால் ஒவ்வொரு நாளும் உலகெங்கும் இருந்து ஹொங்கொங் வரும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும் இடம் இந்த நட்சத்திரங்களின் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

Read article
படிமம்:AvenueofstarsHKnight.jpgபடிமம்:Avenue-of-stars_2.JPGபடிமம்:Avenue_of_Stars_prohibition_sign.JPGபடிமம்:நட்சத்திரங்களின்_ஒழுங்கை_உலாச்சாலை.JPGபடிமம்:Hong_kong_bruce_lee_statue.jpgபடிமம்:புரூசு_லீயின்_தடம்.JPGபடிமம்:ஜக்கிச்சான்_தடம்.JPGபடிமம்:ஜெட்_லீயின்_தடம்.JPGபடிமம்:Hong_Kong_at_night.jpgபடிமம்:Commons-logo-2.svg