நர்க்கொண்டம் தீவு
இந்திய தீவுநர்க்கொண்டம் அல்லது நரகக்குன்றம் தீவு அந்தமான் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய எரிமலை தீவு ஆகும். தீவின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 710 மீ உயரத்திற்கு உயர்கிறது, மேலும் இது அண்டிசைட் எனப்படும் எரிமலைப் பாறைகளால் உருவானது. இது அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாகும், இதன் முக்கியப்பகுதி மேற்கு நோக்கி சுமார் 124 km (77 mi) உள்ளது. நர்க்கொண்டம் தீவு இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். சுமார் 6.8 சதுர கிலோமீட்டர் பரப்பளஉ உடைய இந்த தீவு சிறியதாகும். இது ஒரு செயலற்ற எரிமலை என இந்திய புவியியல் ஆய்வு மையம் வகைப்படுத்தியது.
Read article
Nearby Places
கிழக்கு எரிமலைத் தீவுகள்