Map Graph

நாச்சியார்கோயில்

தஞ்சாவூர் மாவட்ட சிற்றூர்

நாச்சியார்கோவில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இதன் பழைய பெயர் திருநறையூர் ஆகும். இது திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் வைணவ நாச்சியார் கோவில் எனப்படும் திருநறையூர் நம்பி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கல் கருடச் சேவை மிகவும் புகழ்பெற்றது. இவ்வூரில் தயாரிக்கப்படும் நாச்சியார் கோயில் விளக்குகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

Read article
படிமம்:Nachiyar_koil_pano.jpg