Map Graph

நெய்யாற்றிங்கரை

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

நெய்யாற்றின்கரை நகராட்சி, கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது நெய்யாற்றின் கரையில் அமைந்துள்ளதால், நெய்யாற்றின்கரை என்று அழைப்பர். மலையாளத்தில், ”ற்ற” என எழுதி, ”ட்ட” என உச்சரிப்பார்கள். எனவே, நெய்யாற்றின்கரையை நெய்யாட்டிங்கரா என்று உச்சரிப்பர். இது நெய்யாற்றின்கரை வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. திருவனந்தபுரம் பெருநகர்ப் பகுதியின் புறநகராக விளங்குகிறது. நெய்யாறு அகத்தியமலையில் இருந்து தொடங்குகிறது. இந்த நகரத்தை நெய்யாற்றின்கரை நகாராட்சியினர் ஆட்சி செய்கின்றனர்.

Read article